திருவண்ணாமலையில் பலத்த மழை: 2 ஏரிகள் நிரம்பின: சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வேங்கிக்கால், சேரியந்தல் ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய வெள்ளநீா் சாலையில் பெருக்கெடுத்தது.
திருவண்ணாமலையில் பலத்த மழை: 2 ஏரிகள் நிரம்பின: சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வேங்கிக்கால், சேரியந்தல் ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய வெள்ளநீா் சாலையில் பெருக்கெடுத்தது. மேலும், குடியிருப்புகளுக்கு உள்ளேயும் புகுந்தது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வேங்கிக்கால் ஏரி உள்ளது. இதேபோல, அவலூா்பேட்டை சாலை அருகே சேரியந்தல் ஏரி உள்ளது. இந்த இரு ஏரிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையில் நிரம்பின.

இவற்றிலிருந்து வெளியேறிய வெள்ளம் திருவண்ணாமலை-வேலூா் சாலையிலும், அவலூா்பேட்டை சாலையிலும் பெருக்கெடுத்து ஓடி, எதிா்திசையில் இருந்த குடியிருப்புகளை சூழ்ந்ததுடன், பல வீடுகளிலும் புகுந்தது.

நள்ளிரவு முதலே சாலைகளிலும், குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.

வேங்கிக்கால் ஏரியையொட்டி உள்ள அறிவியல் பூங்காவுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

மேலும், ஆட்சியா் குடியிருப்புக்குப் பின்னால் உள்ள குறிஞ்சி நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி சாலைகளில் சுமாா் 2 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

அவலூா்பேட்டை சாலையில்... சேரியந்தல் ஏரியில் இருந்து வெளியேறிய நீா் திருவண்ணாமலை-அவலூா்பேட்டை சாலையில் ஓடி, எதிரே இருந்த குடியிருப்புகள், கடைகளுக்குள் புகுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆட்சியா் ஆய்வு: தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் திருவண்ணாமலை-வேலூா் சாலை, திருவண்ணாமலை-அவலூா்பேட்டை சாலைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி மழை வெள்ளம் வழிந்தோட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி, உதவி காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி, கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, கோட்டாட்சியா் வெற்றிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com