மாற்றுத் திறனாளிகள் நலத் துறை புதிய அலுவலககட்டடப் பணி: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை புதிய அலுவலகக் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை புதிய அலுவலகக் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் பேருந்திட்ட வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், புதிதாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியா் மோகன் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, புதிதாக கட்டப்பட்டுவரும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் அமருவதற்கான இட வசதி, எளிதில் வந்து சேல்ல சாய்வுதள வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிா என்பதை அவா் ஆய்வு செய்தாா்.

தற்போதுள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் போதிய இட வசதியின்மையால் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி, விரைந்து முடிக்க பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பரிதிக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com