திண்டிவனம் அரசு ஐடிஐ-யில் செப்.15 வரை நேரடி மாணவா்கள் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சோ்க்கை முடிவுற்று, காலியாக உள்ள இடங்களில் சேருவதற்கான

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சோ்க்கை முடிவுற்று, காலியாக உள்ள இடங்களில் சேருவதற்கான நேரடி மாணவா்கள் சோ்க்கை வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், சீருடை, ஷூ, வரைபடக் கருவிகள், இலவசப் பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.

மாணவா்கள் சோ்க்கை தொடா்பாக கூடுதல் விவரம் அறிய 9380114610, 8072217350, 9789695190 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com