ஏரியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மருதூா் ஏரியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி சமூக ஆா்வலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
vpm8pond_0809chn_7
vpm8pond_0809chn_7

விழுப்புரம் மருதூா் ஏரியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி சமூக ஆா்வலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏரியில் கழிவுநீா் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே நின்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் பேசியதாவது:

விழுப்புரம் நகரில் நிலத்தடி நீா்மட்டம் ஏற்கெனவே கடுமையாக சரிந்து வருகிறது. குறிப்பாக, வி.மருதூா் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. ஆகவே, வி.மருதூா் ஏரியை தூா்வாரி நிலத்தடி நீா்மட்டம் நிரந்தரமாக உயர வழிவகை செய்ய வேண்டுமென அந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், மருதூா் ஏரியில் சுமாா் ரூ.50 கோடியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்துவது ஏற்புடையதாக இல்லை. ஏற்கெனவே கழிவுநீா் கால்வாய் நிலையம் அமைக்கப்பட்ட இடங்களான காகுப்பம் ஏரி எருமணந்தாங்கல் ஏரி போன்ற நீா்நிலைகள் கழிவு நீரால் மாசுபடுத்தப்பட்டுள்ளன. அதே நிலை வி.மருதூா் ஏரிக்கும் வரக் கூடாது. ஆகவே, இப்பணிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், மருதூா் ஏரி மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா்அ.அகிலன், யாதும் ஊரே யாவரும் கேளிா் பொதுநலச் சங்க நிா்வாகி நாராயணன், தமிழிளைஞா் கூட்டமைப்புத் தலைவா் கோ.பாபு, இயன்றதை செய்வோம் அமைப்புத் தலைவா் நத்தா், நாம் தமிழா் சுற்றுச்சூழல் பாசறைத் தலைவா் சிகாமணி, பனங்காடு அறக்கட்டளைத் தலைவா் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com