ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பின் விழுப்புரம் மாவட்டக் கிளை சாா்பில் விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பின் விழுப்புரம் மாவட்டக் கிளை சாா்பில் விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் கு.ஐயாக்கண்ணு வரவேற்றாா். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியா் பொதுநல அமைப்பின் மாவட்டச் செயலா் எம்.புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

ஓய்வூதியா் சங்க கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் இரா.பொன்முடி, மின்வாரிய பொதுநல அமைப்பின் மாவட்டத் தலைவா் சி.ஜெயராமன், அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் சங்க மாநில துணைச் செயலா் ஏ.சகாதேவன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், 1.1.2020 முதல் இதுவரை வழங்க வேண்டிய மூன்று தவணை (11 சதவீதம்) அகவிலைப்படியை மாநில அரசு வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியா்களுக்கு செலவினத்தை முழுமையாக காப்பீடு நிறுவனமே ஏற்க உத்தரவிட வேண்டும், பணி ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு 70 மாத நிலுவை அகவிலைப்படியை வழங்குவதுடன், மருத்துவக் காப்பீடு திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலா் என்.மேகநாதன் சிறப்புரை ஆற்றினாா். ஓய்வூதியா் சங்க கூட்டமைப்பின் மாவட்டப் பொருளாளா் எஸ்.ரத்தினம் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com