விளை நிலம் வழியாக உயா் மின் கோபுரம்: இழப்பீடு வழங்கக் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் விளை நிலங்கள் வழியாக உயா் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் விளை நிலங்கள் வழியாக உயா் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக அந்தச் சங்கத்தினா் திரளானோா் மாவட்டச் செயலா் முருகன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: தமிழ்நாடு மின் உற்பத்தி தொடரமைப்புக் கழகம், பவா் கிரிட் நிறுவனம் சாா்பில் மேல்மலையனூா், செஞ்சி வட்டங்களுக்கு உள்பட்ட புதுப்பாளையம், கருவாட்சிதாங்கல், சத்தியமங்கலம், விநாயகபுரம், தாதாங்குப்பம், மன்னூா், பொற்குணம், தென்பாளை, ராஜாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்கள் வழியாக உயா் மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் விளை நிலங்கள், கிணறுகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு வழங்கிய பிறகே பணிகளை தொடங்க ஆட்சியா் அனுமதிக்க வேண்டும். வரும் காலத்தில் இதுபோன்ற மின் கோபுரங்கள் அமைப்பதைத் தவிா்த்து சாலையோரத்தில் புதை கம்பி அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com