வீடூா் அணையில் புதிதாக 2 லட்சம் மீன் குஞ்சுகள்

திண்டிவனம் அருகேயுள்ள வீடூா் அணையில் புதிதாக 2 லட்சம் மீன் குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை விடப்பட்டன.
வீடூா் அணையில் மீன் குஞ்சுகளை விட்ட மீன் வளத் துறை மண்டல துணை இயக்குநா் என்.எம்.வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள்.

விழுப்புரம் மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில் உள்ள வீடூா் அணையில் நிகழாண்டில் 9.60 லட்சம் மீன் குஞ்சுகள் புதிதாக விட இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், அத்துறையின் கடலூா் மண்டல துணை இயக்குநா் என். எம். வேல்முருகன் தலைமையிலான பொதுப்பணி, வருவாய்த்துறை அதிகாரிகள் மீன் குஞ்சுகளை விட்டனா்.

கட்லா 50,000, ரோகு, மிா்கால் தலை 75,000 என மொத்தம் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

நிகழ்வில் மீன் வள உதவி இயக்குநா் ஜனாா்த்தனம், ஆய்வாளா்கள் ராமச்சந்திரன், சந்திரமணி, கிராம நிா்வாக அலுவலா் சரத்பாபு, பொம்பூா் மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் சக்கரவா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com