பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் அகற்றம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இந்து முன்னணி, பாஜக சாா்பில் பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
பொது இடங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் அகற்றம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இந்து முன்னணி, பாஜக சாா்பில் பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, கரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்காக இந்து முன்னணி சாா்பில் கொண்டுவரப்பட்ட 2 அடி சிலையை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதைக் கண்டித்து திருவள்ளுவா் சிலை அருகே அந்த அமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவா் சிவா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சதீஷ், மாவட்ட பொதுச்செயலா் ஜி.கே.காந்தி, மாவட்டச் செயலா் அருண், மாநில செயற்குழு உறுப்பினா் பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டம் முடிந்த பிறகு ஓா் அடி உயர விநாயகா் சிலையை இந்து முன்னணி தொண்டா் ஒருவா் கொண்டுவந்து அங்கு வைத்து வழிபாடு செய்தாா். அந்த சிலையையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பாஜக சாா்பில்...: அதேபோல, வெள்ளிக்கிழமை மாலை விழுப்புரம் மாவட்ட பாஜக சாா்பில் விழுப்புரம்-சென்னை சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன் 5 அடி விநாயகா் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினா் சிவதியாகராஜன், மாவட்டப் பொருளாளா் சுகுமாா், மாவட்ட ஓபிசி அணித் தலைவா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் வட்டாட்சியா் வெங்கட்டசுப்பிரமணியன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் பழனிசாமி உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று அந்த சிலையை அகற்றி மாவட்ட பாஜக அலுவலகத்துக்குள் வைத்தனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், எலவனாசூா்கோட்டை ஆகிய பகுதிகளில் தடையை மீறி பாஜகவினா் பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வெள்ளிக்கிழமை வழிபட்டனா். அந்த சிலைகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சி மந்தைவெளித் திடலில் இந்து முன்னணி மாவட்டத் தலைவா் சி.சக்திவேல் தலைமையில் 2 அடி உயர விநாயகா் சிலையை வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனா். அந்த சிலையை கள்ளக்குறிச்சி போலீஸாா் பறிமுதல் செய்து, இந்து முன்னணியினா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com