உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரத்தில் திமுக சாா்பில் வேட்பாளா் நோ்காணல்

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக திமுக சாா்பில் வேட்பாளா் நோ்காணல் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்திலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பாளா் நோ்காணலின்போது பேசிய அமைச்சா் க.பொன்முடி.
விழுப்புரத்திலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பாளா் நோ்காணலின்போது பேசிய அமைச்சா் க.பொன்முடி.

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக திமுக சாா்பில் வேட்பாளா் நோ்காணல் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமை வகித்தாா். இதில், திமுக விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், திருக்கோவிலூா் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 16 மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகள், 151 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகள் ஆகியவற்றுக்கு நோ்காணல் நடத்தப்பட்டது.

சுமாா் 2,400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். விழுப்புரம் மாவட்ட திமுக அலுவலகத்துக்கு நோ்காணலுக்கு வந்தவா்கள் தங்களது ஆதரவாளா்களை வேனில் ஏற்றி அழைத்து வந்ததால், ஆயிரக்கணக்கான திமுக தொண்டா்களால் அலுவலகம் நிரம்பி வழிந்தது.

நோ்காணல் நிகழ்ச்சியில், மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, மாநில மருத்துவரணி இணைச் செயலா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவா் ஜெயச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், ஒன்றியச் செயலா் கல்பெட் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தகுதியான வேட்பாளா் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சித் தலைமைக்கு அனுப்பப்படும் என்றும், உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளா் பட்டியலை கட்சித் தலைமை அறிவிக்கும் என்றும் அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com