மாா்க்சிஸ்ட் கட்சினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2021 11:20 PM | Last Updated : 11th September 2021 11:20 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட பெருந்திட்ட அலுவலக வளாகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தக் கட்சியின் விழுப்புரம் வட்டச் செயலா் கண்ணப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் குமாா் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், திரிபுரா மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டதைக் கண்டித்தும், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராஜீவ் காந்தி, ஜீவா, வீரமணி, நாகராஜன், மேகநாதன், புருஷோத்தமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.