ஊரக உள்ளாட்சித் தோ்தல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2-ஆம் நாளில் 1,774 போ் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாம் நாளான வியாழக்கிழமை மொத்தம் 1,774 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாம் நாளான வியாழக்கிழமை மொத்தம் 1,774 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் கிராம ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 65 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

இரண்டாம் நாளான வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 4 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 320 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1,143 பேரும் என மொத்தம் 1,467 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய இரண்டு நாள்களில் மொத்தம் 1,537 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2-ஆம் நாளான வியாழக்கிழமை ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 6 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 147 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 478 பேரும் என மொத்தம் 631போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

முன்னதாக, புதன்கிழமை கிராம ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்கு 19 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இரு நாள்களிலும் மொத்தம் 650 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இரு மாவட்டங்களிலும் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com