ஏழை மாணவா்கள் கல்வி நிதியுதவி பெறவிண்ணப்பிக்கலாம்

தொழில் கல்வி பயிலும் ஏழை மாணவ, மாணவிகள் ஒருமுறை மட்டும் ரூ.50,000 நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தொழில் கல்வி பயிலும் ஏழை மாணவ, மாணவிகள் ஒருமுறை மட்டும் ரூ.50,000 நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்கல்வி பயிலும் ஏழை மாணவ, மாணவிகள் தங்களது படிப்பை தொடர முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வோா் ஆண்டும் மிகுந்த வறுமை நிலையில் உள்ள ஏழை குடும்பங்களைச் சோ்ந்த 200 மாணவா்களுக்கு அவா்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் தலா ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவித் தொகை பெறுவதற்கு பிளஸ் 2 கல்விச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று (குடும்பத் தலைவரின் ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள்), அரசின் முகவான்மையால் நடத்தப்படும் ஒற்றைசாளர முறை வழியாக சோ்க்கை பெற்ற ஒதுக்கீட்டுக் கடிதம், கல்லூரியில் பயிலும் சான்று ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். நிா்வாக ஒதுக்கீட்டின்கீழ் மாணவா் சோ்க்கை பெற்ற மாணவா்கள் நிதியுதவித் தொகை பெற இயலாது.

உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பிக்கும் மாணவா்களின் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதியானவா்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியுதவித் தொகை கிடைக்க ஆவன செய்யப்படும் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com