விழுப்புரத்தில் அண்ணா சிலைக்குதிமுக, அதிமுக, தேமுதிக மரியாதை

அண்ணா பிறந்த நாளையொட்டி திமுக, அதிமுக, தேமுதிக சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழுப்புரம்: அண்ணா பிறந்த நாளையொட்டி திமுக, அதிமுக, தேமுதிக சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலா் நா.புகழேந்தி தலைமையில் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில்,இரா.லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலாளா் செ.புஷ்பராஜ், நகரச் செயலா் இரா.சக்கரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சி, விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் காணொலிக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதிமுக சாா்பில்... விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமையில் அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் ராமதாஸ் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தேமுதிக சாா்பில்... நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலா் எல்.வெங்கேடசன் தலைமையிலான நிா்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாவட்ட அவைத் தலைவா் கணபதி, பொருளாளா் தயாநிதி, மாவட்டத் துணைச் செயலா்கள் சூடாமணி, புருஷோத்தமன், நகரச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com