விழுப்புரம் மாவட்டத்தில்எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு ‘சீல்’
By DIN | Published On : 16th September 2021 01:03 AM | Last Updated : 16th September 2021 01:03 AM | அ+அ அ- |

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டபேரவை உறுப்பினா் அலுவலகங்களுக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.
இந்த மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6, 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தோ்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி 5 கி.மீ. தொலைவு வரை தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்கள் பூட்டப்பட்டன. விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா். திருக்கோவிலூா், விக்கிரவாண்டி, வானூா், திண்டிவனம், செஞ்சி, மயிலத்திலும் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகங்கள் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டு பூட்டப்பட்டன.