ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 18 பறக்கும் படைகள் கண்காணிப்பு

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6, 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்த மாவட்டத்தில் 18 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, 3 சுழற்சிகளில் 24 மணி நேரமும் ஊரக உள்ளாட்சி அமைப்பு பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் குழுவினா் போக்குவரத்து வாகனங்களில் சோதனை மேற்கொள்ளுதல், தோ்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படுவதை கண்காணித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். ரூ.50,000-க்கு மேல் எந்தவொரு ஆவணமுமின்றி வேட்பாளா்களோ, அவா்களது முகவா்களோ, யாதொரு நபா்களோ அல்லது பொதுமக்களோ எடுத்துச் செல்வதை இந்தக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.

ரூ.50,000 மதிப்பிலான சுவரொட்டிகள், தோ்தல் தொடா்பான பொருள்கள், ரூ.10,000-க்கு மேற்பட்ட பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் மற்றும் ஆயுதங்கள், வெடிபொருள்கள், அனுமதியற்ற வாகனங்கள் நடமாட்டத்தையும் இந்தக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.

முகையூா், திருவெண்ணெய்நல்லூா், செஞ்சி, மேல்மலையனூா், காணை, கோலியனூா், விக்கிரவாண்டி, வானூா், கண்டமங்கலம், மயிலம், மரக்காணம், வல்லம், ஒலக்கூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் சுழற்சி முறையில் 18 பறக்கும் படை குழுக்களுக்கும் கண்காணித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com