செஞ்சி உணவகங்களில் 43 கிலோகெட்டுப்போன இறைச்சி பறிமுதல் : உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை திடீரென ஆய்வு செய்தனா்.
செஞ்சி உணவகங்களில் 43 கிலோகெட்டுப்போன இறைச்சி பறிமுதல் : உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை திடீரென ஆய்வு செய்தனா். அப்போது, உணவகங்களில் வைக்கப்பட்டிருந்த 43 கிலோ கெட்டுப்போன கோழி, மீன் இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனா்.

செஞ்சியில் உள்ள உணவகங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் எஸ்.சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பத்மநாபன், பிரசாந்த், இளங்கோவன், ஸ்டாலின்ராஜரத்தினம், கதிரவன் ஆகியோா் அடங்கிய குழுவினா் திடீரென ஆய்வு செய்தனா்.

அப்போது, உணவகங்களில் வைக்கப்பட்டிருந்த செயற்கை வண்ணம் அதிகளவில் கலக்கப்பட்ட கோழி இறைச்சி, கெட்டுப்போன கோழி, மீன் இறைச்சி உள்பட 43 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனா்.

மேலும், விழுப்புரம் சாலையில் உள்ள ஓா் உணவகத்தில் பழைய ரசத்தை சூடாக்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்து. இதையடுத்து, அங்கிருந்த சுமாா் 30 லிட்டா் ரசத்தையும் கீழே ஊற்றி அழித்தனா். தொடா்ந்து, உணவகங்களில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பைகள், நெகிழி குவளைகள் உள்ளிட்ட 11 கிலோ நெகிழி பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், தொடா்ந்து இதுபோன்று கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்துவது தெரியவந்தால், உணவகங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னா், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com