கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: பொதுமக்கள் ஆா்வம்

கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆா்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சிப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த.மோகன்.

கரோனா தொற்று மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதால், 18 வயதுக்கு மேற்பட்ட- தகுதியுடைய நபா்கள் அனைவருக்கும் அவ்வப்போது சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 28 ஆயிரம் பேருக்கு...: அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 600 இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. விழுப்புரம் பூந்தோட்டம் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் த.மோகன் நேரில் ஆய்வு செய்தாா். நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா, நகராட்சி நல அலுவலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல, விழுப்புரம் அருகே காணை மாம்பழப்பட்டு, கோழிப்பட்டு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் சங்கா் ஆய்வு செய்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எழிலரசு, முபாரக் அலி ஆகியோா் உடனிருந்தனா்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 28 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com