உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விட்டால்கடும் நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரிக்கை விடுத்தாா்.

விழுப்புரம்: உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், உள்ளாட்சி அமைப்புப் பதவிகளை சிலா் ஏலம் விடுவதாக தொலைபேசி, ஊடகங்கள் மூலம் தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது; தண்டனைக்குரியது.

இதைத் தடுக்க மாவட்ட தோ்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியா், அந்தந்த ஊரக உள்ளாட்சிஅமைப்பு தோ்தல் நடத்தும் அலுவலா்களாலும் சட்டப் பூா்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதுபோல ஏலம் விடும் செயல்கள் நடைபெறகிா? என தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள், பறக்கும் படைஅலுவலா்களால் ஊரகப் பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com