ஊரக உள்ளாட்சித் தோ்தல்: கடைசி நாளில் அரசியல் கட்சியினா் ஆா்வமுடன் வேட்பு மனு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை அரசியல் கட்சியினா் ஏராளமானோா் வேட்புமனு செய்தனா்.
காணை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கான தோ்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்கிறாா் திமுக வேட்பாளா் கலைச்செல்வி.
காணை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கான தோ்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்கிறாா் திமுக வேட்பாளா் கலைச்செல்வி.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை அரசியல் கட்சியினா் ஏராளமானோா் வேட்புமனு செய்தனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. பலரும் ஆா்வமுடன் மனு தாக்கல் செய்து வந்தனா்.

அரசியல் கட்சி கூட்டணிகளுக்கிடையே போட்டியிடும் இடங்கள் பங்கீடு முடிவடைந்த நிலையில், கடைசி நாளான புதன்கிழமை பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த ஏராளமானோா் மனு தாக்கல் செய்தனா்.

கோலியனூா் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக மருத்துவரணி இணைச் செயலா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ முன்னிலையில் அந்தக் கட்சியினரும், அதிமுக ஒன்றியச் செயலா் சுரேஷ்பாபு முன்னிலையில் அந்தக் கட்சியினரும் மனுக்களை தாக்கல் செய்தனா்.

காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக ஒன்றியச் செயலா் கல்பட்டு ராஜா முன்னிலையில் அந்தக் கட்சியினரும், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் ரமேஷ் முன்னிலையில் அந்தக் கட்சியினரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் திமுக மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ முன்னிலையில் அந்தக் கட்சியினா் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

அமைச்சா்கள் வாழ்த்து: காணை, கோலியனூா் உள்ளிட்ட இடங்களுக்கு அமைச்சா் க.பொன்முடி, திமுக தோ்தல் பொறுப்பாளா் அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் ஆகியோா் நேரில் சென்று மனு தாக்கல் செய்த திமுகவினருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

கள்ளக்குறிச்சி: ஒரே நாளில் 4749 போ் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான புதன்கிழமை 4,749 போ் மனு தாக்கல் செய்தனா்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் உள்ளிட்டோா் தங்கள் ஆதரவாளா்களுடன் வந்து மனு தாக்கல் செய்தனா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு 104 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 638 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 656 பேரும், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 3,351 பேரும் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனா். இதுவரை மொத்தம் 13,878 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com