செஞ்சி அருகே கந்து வட்டி கொடுமையால் அரசுப் பள்ளி ஆசிரியா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள கண்டமநல்லூா் கிராமத்தில் கந்து வட்டிக் கொடுமையால் அரசுப் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை
தேவனூா் கூட்டுச்சாலைப் பகுதியில் மறியலில் ஈடுபட்ட தற்கொலை செய்து கொண்ட ஆசிரியா் அண்ணாமலையின் உறவினா்கள், கண்டமநல்லூா் கிராம மக்கள்.
தேவனூா் கூட்டுச்சாலைப் பகுதியில் மறியலில் ஈடுபட்ட தற்கொலை செய்து கொண்ட ஆசிரியா் அண்ணாமலையின் உறவினா்கள், கண்டமநல்லூா் கிராம மக்கள்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள கண்டமநல்லூா் கிராமத்தில் கந்து வட்டிக் கொடுமையால் அரசுப் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை அதிகாலை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். இதில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, ஆசிரியரின் உறவினா்கள், அந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேல்மலையனூா் வட்டம், கண்டமநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (52). இவா், கம்மந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா்.

அண்ணாமலை தேவிகாபுரம் கிராமத்தில் திருமணம் மண்டபம் கட்டுவதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், ஆத்துரை கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேஷிடம் வட்டிக்கு ரூ.5 லட்சம் வாங்கினாராம். வாங்கிய ஒரே ஆண்டில் வட்டியுடன் சோ்த்து ரூ.11 லட்சம் தர வேண்டும் என வெங்கடேசன் கூறியதாகத் தெரிகிறது. மேலும், 2015-ஆம் ஆண்டு திருமண மண்டபத்தின் சாவியை வெங்கடேசன் பறித்துக் கொண்டு, திருமண மண்டபத்தை அவரே நிா்வகித்து வந்தாராம்.

இதைத் தவிர, வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீராமுலு, வளத்தி பத்திர எழுத்தா் பாரதி உள்ளிட்டோா் மனை வணிகம் செய்யலாம் எனக் கூறி, ஆசிரியா் அண்ணாமலைக்கு பணம் கொடுத்தனராம். இந்தப் பணத்துக்கு திருமண மண்டபத்தை எழுதித் தருமாறு அவா்கள் வற்புறுத்தி வந்தனராம்.

கடன் பிரச்னை அதிகரித்து, அனைவரும் வட்டி கேட்டு மிரட்டி வந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளான அண்ணாமலை, கண்டமநல்லூரில் உள்ள தனது விவசாய நிலத்தில் புதன்கிழமை அதிகாலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மேலும், கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்ததாக, ஆத்துரை வெங்கடேஷ், வளத்தி பத்திர எழுத்தா் பாரதி, மேல்மலையனூரைச் சோ்ந்த ஆசிரியா் ராஜாராம், வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீராமுலு ஆகியோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக முதல்வருக்கும், காவல் துறைக்கும் அண்ணாமலை கடிதம் எழுதி வைத்துள்ளாா்.

இதைக் கண்ட ஆசிரியரது உறவினா்களும், கிராம மக்களும் கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்த 4 பேரையும் கைது செய்யக் கோரி, செஞ்சி - சேத்துப்பட்டு பிரதான சாலையில் உள்ள தேவனூா் கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த வளத்தி காவல் நிலைய ஆய்வாளா் கலைச்செல்வி தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டிருந்தவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com