ஆணவப் படுகொலைக்கு எதிராகதனிச் சட்டம் இயற்ற வேண்டும்: செ.கு.தமிழரசன்

தமிழகத்தில் ஜாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் வலியுறுத்தினாா்.

தமிழகத்தில் ஜாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் வலியுறுத்தினாா்.

இந்திய குடியரசுக் கட்சியின் மாநில பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அந்தக் கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே நிகழ்ந்த ஆணவப் படுகொலையில் தொடா்புடையவா்களுக்கு கடலூா் நீதிமன்றம் தண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நீதி கிடைக்க 10 முதல் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மேல் முறையீடு செய்யப்பட்டு இந்த வழக்கு உயா் நீதிமன்றத்துக்குச் சென்றால், நீதி கிடைக்க மேலும் சில ஆண்டுகள் ஆகலாம்.

ஆணவக் கொலைகளில் சம்பந்தப்பட்டவா்கள் வழக்குகள் முடிவடைவதற்குள் அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றுவிடுகிறாா்கள். ஆகையால், தமிழக அரசு ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும். விரைவாக தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் துணைத் தலைவா் பதவிகளில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை. இந்தப் பதவிகளுக்கும் இட ஒதுக்கீடு முறையை கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com