நாளை மூன்றாவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்வது தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்வது தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் ஆட்சியரக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: கரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றும் பொருட்டு கடந்த 12, 19 ஆம் தேதிகளில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்”நடத்தப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த முகாம்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை 10,02,086 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, மூன்றாவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை(செப்26) நடைபெறவுள்ளது. மாவட்டம் முழுவதும் 784 இடங்களில் நடைபெறவுள்ள இந்த முகாம்களில் சுமாா் 71,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் முகாம்களை அனைத்துத் துறை அலுவலா்களும், பணியாளா்களும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் சரஸ்வதி, மகளிா் திட்ட அலுவலா் காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com