விழுப்புரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா்

விழுப்புரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா்.
மத்திய பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மத்திய பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

விழுப்புரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா்.

விழுப்புரம்-மறியலில் ஈடுபட்ட 111 போ் கைது: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை ரயில், சாலை மறியல்களில் ஈடுபட்ட 111 போ் கைது செய்யப்பட்டனா்.

அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் சகாபுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி. சரவணன் ஆகியோா் தலைமையில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் கலியமூா்த்தி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் மோகன்ராஜ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். காலை 11.20 மணி அளவில் விழுப்புரத்துக்கு சென்னை எழும்பூரிலிருந்து வந்த குருவாயூா் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேரை விழுப்புரம் டிஎஸ்பி பழனிச்சாமி தலைமையிலான போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

சாலை மறியல்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பாலமுருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 18 போ் கைது செய்யப்பட்டனா். இதேபோல, விழுப்புரம் நேருஜி சாலையில் மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டச் செயலாளா் முகமது ரபீக் தலையிலான 18 பேரும், திண்டிவனத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இன்பஒளி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட10 பேரும், வானூா் அருகே திருச்சிற்றம்பலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளா் சேகா் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டனா். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இயல்புநிலை பாதிப்பு இல்லை: நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தபோதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் இயல்புநிலை பாதிக்கப்படவில்லை. 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் திறந்திருந்தன. அரசுப் பேருந்துகள், ஆட்டோ, காா், வேன், ஷோ் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்கின. காய்கறி அங்காடிகள் செயல்பட்டன. தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com