தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில்மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி வருகிற அக்.2-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி வருகிற அக்.2-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டியும், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளையொட்டியும் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குத் தனித் தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் அக். 2-ஆம் தேதி (சனிக்கிழமை) 10 மணிக்கு பள்ளி மாணவா்களுக்கும், பிற்பகல் கல்லூரி மாணவா்களுக்கும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும். கல்லூரி மாணவா்களுக்கும் முதல்பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும். வெற்றி பெறும் மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரை தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகையாக ரூ.2,000 வீதம் வழங்கப்பெறும்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தப் பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com