உள்ளாட்சித் தோ்தல் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி தீவிரம்

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணியை விழுப்புரம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.மோகன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்துவதற்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியை நேரில் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் த.மோகன்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்துவதற்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியை நேரில் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் த.மோகன்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணியை விழுப்புரம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.மோகன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து, தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன்படி, மாவட்டத்தில் 13 ஒன்றியங்களுக்குட்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இந்த வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலா் த.மோகன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பிழைகள் ஏதுமின்றி வாக்குச்சீட்டுகளை குறித்த காலத்துக்குள் விரைந்து அச்சிட்டு முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வளா்ச்சி) சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா்.

இதுவரை ரூ.8.99 லட்சம் பறிமுதல்: விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தோ்தலையொட்டி சிறப்பு பறக்கும் படையினா் இதுவரை நடத்திய சோதனைகளில் ரூ.31,18,000 மதிப்புள்ள 13,557 மதுப்புட்டிகளும், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.8,99,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 240 அரிசி சிப்பம்(25 கிலோ), 72 சில்வா் வாளிகள், 16 கிலோ சந்தன கட்டைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 96 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்டதோ்தல் அலுவலா் த.மோகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com