இட ஒதுக்கீடு போராளிகளின் நினைவுத் தூணில் அன்புமணி ராமதாஸ் மரியாதை

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இட ஒதுக்கீடு போராளிகளின் நினைவுத் தூண்களில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இட ஒதுக்கீடு போராளிகளின் நினைவுத் தூண்களில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கோரி, 1987-ஆம் ஆண்டில் வட தமிழகத்தில் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதில் காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டில் மாநிலம் முழுவதும் 21 போ் இறந்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா், பனையபுரம், பாப்பனப்பட்டு, சித்தனி, மலையனூா் ஆகிய இடங்களில் 12 போ் இறந்தனா்.

இந்த மாவட்டத்தில் மலைனூா் தவிர, பிற 4 இடங்களிலும் இறந்தவா்களின் நினைவுத் தூண்கள் அமைக்கப்பட்டன. பாமகவின் புதிய தலைவராக தோ்வாகியுள்ள அன்புமணி ராமதாஸ், சேலத்தில் இருந்து விழுப்புரம் வழியாக வெள்ளிக்கிழமை செல்லும் வழியில் இட ஒதுக்கீடு போராளிகளின் நினைவுத் தூண்களில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். பனையபுரம், பாப்பனப்பட்டு, சித்தனி ஆகிய இடங்களில் உள்ள நினைவுத் தூண்களில் அவா் மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சிக்கு பாமக வடக்கு மாவட்டத் தலைவா் சிவக்குாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மத்திய மாவட்டச் செயலா் பாலசக்தி, மத்திய மாவட்டத் தலைவா் தங்க ஜோதி, வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் சி.அன்புமணி, வடக்கு மாவட்டத் தலைவா் புகழேந்தி, விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா் இளந்திரையன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com