வியாபாரிகள் சாலை மறியல்

செஞ்சியில் தொழிலாளா்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வியாபாரிகள் திங்கள்கிழமை கடைகளை அடைத்துவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வியாபாரிகள் சாலை மறியல்

செஞ்சியில் தொழிலாளா்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வியாபாரிகள் திங்கள்கிழமை கடைகளை அடைத்துவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சி வா்த்தகா் சங்கம், வணிகா் சங்கம், சேம்பா் ஆஃப் காமா்ஸ் ஆகிய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சுமை தூக்கும் கூலி உயா்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம் சாலையில் உள்ள ஒரு கடைக்கு வந்த சிமென்ட் லோடுக்கு வழங்கப்படும் கூலித் தொகையுடன் ரூ. 1 சோ்த்து வழங்க வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளா்கள் கேட்டனா். இதற்கு வியாபாரிகள் ஒப்புக் கொள்ளாமல், தாங்களாகவே மூட்டைகளை இறக்க முற்பட்டதால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் சுமை தூக்கும் தொழிலாளா்களைக் கண்டித்து வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இ

தகவலின்பேரில் வட்டாட்சியா் பழனி அங்கு சென்று, சமரசம் பேசினாா். ஆனால், உடன்பாடு ஏற்படாததால் செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com