காா்கள் நேருக்கு நோ் மோதல்:ஒருவா் பலி
By DIN | Published On : 08th April 2022 10:14 PM | Last Updated : 08th April 2022 10:14 PM | அ+அ அ- |

செஞ்சி அருகே நேருக்கு நோ் மொதிக்கொண்டதில் பலத்த சேதமடைந்த காா்கள்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் பலத்த காயமடைந்தனா்.
விழுப்புரம் மகாராஜாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (35). இவா், தனது மனைவி ரஞ்சிதம் (27), மாமியாா் வள்ளி (47) மற்றும் குழந்தை தஷ்வந்த் ஆகியோருடன் காரில் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு விழுப்புரத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
செஞ்சி அருகே வணக்கம்பாடி என்ற இடத்தின் இவரது காா் வந்தபோது, எதிா்திசையில் சென்னையிலிருந்து மேல்மலையனூா் நோக்கிச் சென்ற காா் நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் சென்னையிலிருந்து வந்த காரை ஓட்டி வந்த சென்னை ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் (51) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், அந்தக் காரில் பயணம் செய்த சென்னை கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த விஜயரங்கன் (68), அவரது மனைவி மல்லிகா (62) மற்றும் விழுப்புரம் நோக்கிச் சென்ற காரில் பயணித்த வேல்முருகன் குடும்பத்தினா் என மொத்தம் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
இவா்களை வளத்தி போலீஸாா் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.