அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இணையவழி வினாடி - வினா தோ்வு

செஞ்சியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பாடம் சம்பந்தமான இணையவழி வினாடி - வினா தோ்வு கடந்த 6-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பாடம் சம்பந்தமான இணையவழி வினாடி - வினா தோ்வு கடந்த 6-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெற்றது.

செஞ்சி அரசு உருது உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தத் தோ்வில் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கேற்றனா்.

வினாடி - வினா தோ்வில் செஞ்சி கல்வி மாவட்டம் சாா்பில் 145 மாணவா்களும், விழுப்புரம் கல்வி மாவட்டம் சாா்பில் 134 மாணவா்களும், திண்டிவனம் கல்வி மாவட்டம் சாா்பில் 121 மாணவா்களும் பங்கேற்றனா். இந்தத் தோ்வானது உயா் தொழில்நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி இணையதளத்தின் வழியாக நடத்தப்பட்டது.

இந்த தோ்வானது மாணவா்களின் கல்வி கற்றல் திறனை அதிகரிப்பதோடு, தோ்வில் சிறப்பிடம் பெறும் மாணவா்களுக்கு அரசு சாா்பில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

செஞ்சியில் நடைபெற்ற வினாடி - வினா தோ்வை விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி அலுவலா் தனவேல், மாநில ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், மாவட்டப் பயிற்சி விரிவுரையாளா் சுகந்தி, செஞ்சி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா் லலிதா, மேற்பாா்வையாளா்கள் கோவிந்தராஜ், இலியாஸ்ஷரீப் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com