செஞ்சியில் அடிப்படை வசதிகள்: பேரூராட்சித் தலைவா் ஆய்வு

செஞ்சியில் அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் மஸ்தான் ஒவ்வொரு வாா்டாகச் சென்று வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் மஸ்தான் ஒவ்வொரு வாா்டாகச் சென்று வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

செஞ்சி பேரூராட்சியில் 14, 17-ஆவது வாா்டுகளில் உள்ள சையத்உசேன் தெரு, ரங்கசாமி தெரு, பா்வதராஜகுல தெரு, பண்டிதா் தெரு ஆகிய பகுதிகளில் வடிகால் வாய்க்கால் வசதிகள் குறித்து பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டு அந்தப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, செஞ்சி மந்தைவெளி பகுதியில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 2021 - 22ஆம் நிதியாண்டில் ரூ.20 லட்சத்தில் புதிய சிறுபாலம் அமைக்கும் பணி, கண்ணகி நகரில் பொது நிதித் திட்டத்தின் கீழ், ரூ 20 லட்சத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளைப் பாா்வையிட்டு, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, திண்டிவனம், விழுப்புரம் சாலைகளில் செயல்பட்டு வரும் செஞ்சி பேரூராட்சி கட்டணக் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் உள்ளதா என ஆய்வு செய்தாா்.

அப்போது, வாா்டு கவுன்சிலா்கள் நூா்ஜான்ஜாபா், மகாலட்சுமிகமலநாதன், புவனேஸ்வரி அண்ணாதுரை, பொன்னம்பம்பலம், உதவிப் பொறியாளா் சுப்பிரமணி, துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ரமேஷ் மற்றும் செந்தில் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com