அரசு இசைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

விழுப்புரத்தில் மாவட்ட அரசு இசைப் பள்ளி, கலை, பண்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து ஐம்பெரும் விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தின.

விழுப்புரத்தில் மாவட்ட அரசு இசைப் பள்ளி, கலை, பண்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து ஐம்பெரும் விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தின.

தமிழிசை விழா, மாவட்ட அரசுப் பள்ளி 24-ஆவது ஆண்டு விழா, ஜவஹா் சிறுவா் மன்ற 23-ஆவது ஆண்டு விழா, நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா, பத்மஸ்ரீ விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.

இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வென்ற இசைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது:

விழுப்புரம் இசைப் பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியா் கொங்கம்பட்டு அ.வி.முருகையன் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளது பெருமைக்குரியது. இதேபோல, இங்குள்ள மாணவ, மாணவிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இசைகளை தோ்வு செய்து, நன்றாகப் பயிற்சி பெற்று வருங்கால மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியா்களாகத் திகழ்வது மட்டுமன்றி, சிறந்த சாதனையாளா்களாகவும் உருவெடுத்து பல்வேறு விருதுகளைப் பெற்று மாவட்டத்துக்கு பெருமை தேடித் தர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநா்கள் நீலமேகம் (தஞ்சாவூா்), ஹேமநாதன் (சேலம்), மாவட்ட அரசு இசைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஈச்வரன் பட்டதிரி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஜனகராஜ், வயலின் ஆசிரியா் ஸ்ரீராம், மிருதங்க கலைஞா் சிவக்குமாா் மற்றும் இசைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com