செஞ்சி கிளை நூலகத்தில் முப்பெரும் விழா
By DIN | Published On : 18th April 2022 01:24 AM | Last Updated : 18th April 2022 01:24 AM | அ+அ அ- |

புத்தகக் கண்காட்சி, நூலக கண்காணிப்புக் கேமரா தொடக்கிவைத்தல், நூலக புரவலா்களுக்கு பட்டங்களை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு செஞ்சி பேரூராட்சிமன்றத் தலைவா் மொக்தியாா்மஸ்தான் தலைமை வகித்தாா். நூலகா் ஏ.பூவழகன் வரவேற்றாா். வாசகா் வட்டத் தலைவா் செந்தில்பாலா, துணைத் தலைவா் கமலக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சிமஸ்தான், நூலகத்தில் ரூ.6.49 லட்சத்திலான புத்தகங்களை வாசகா்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தாா். மேலும், நூலகா் பூவழகன் நன்கொடையாக வழங்கிய கண்காணிப்புக் கேமராவை தொடக்கிவைத்ததுடன், நூலக புரவலா்களுக்கு பட்டயங்களையும் அமைச்சா் வழங்கினாா்.
விழாவில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், துணைத் தலைவா் ஜெயபாலன், புலவா் கோ.தமிழரசன், எழுத்தாளா் தமிழினியன், வழக்குரைஞா் சக்திராஜன், குறும்பட இயக்குநா் ஆல்பா்ட், நூலகா்கள் ராதாகிருஷ்ணன், சற்குணவதி, அன்பழகன், முருகன், ரமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.