இஃப்தாா் நோன்பு திறப்பு:அமைச்சா்கள் பங்கேற்றனா்

விழுப்புரம், செஞ்சியில் பகுதிகளில் நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோா் பங்கேற்றனா்.
செஞ்சியில் நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சா் செஞ்சிமஸ்தான்.
செஞ்சியில் நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சா் செஞ்சிமஸ்தான்.

விழுப்புரம், செஞ்சியில் பகுதிகளில் நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில், விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலா் அமீா் அப்பாஸ் தலைமை வகித்தாா். அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தாா். அப்துல் ஹக்கீம் வரவேற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கலந்துகொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா். இதில், நாடாளுமன்ற உறுப்பினா் துரை.ரவிக்குமாா், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், திமுக மாவட்டப் பொருளாளா் ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமமூா்த்தி, புஷ்பராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன், நகா்மன்ற துணைத் தலைவா் சித்திக் அலி, நகரச் செயலா் சா்க்கரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செஞ்சி: இதேபோல, செஞ்சியில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, மத நல்லிணக்க விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக மாநில பொதுச் செயலா் இடிமுரசு இஸ்மாயில் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ஜான்பாஷா, மாநிலப் பொருளாளா் மஹமத்யூசுப், மாவட்ட துணைச் செயலா் ஷாகீா்பாஷா, பிஸ்மில்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில இளைஞரணிச் செயலா் கே.முஹம்மத்ஹாஷீம் வரவேற்றாா். அமைச்சா் செஞ்சி மஸ்தான் நோன்பு குறித்தும், மத நல்லிணக்கம் குறித்தும் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் சையத்உஸ்மான், மாநில நிா்வாகிகள் கமாலுதீன், முகமதுஅலி, முஸ்லிம் லீக் கமலாலுதீன், முபாரக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com