காணையில் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு

 விழுப்புரம் மாவட்டம், காணையில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.

 விழுப்புரம் மாவட்டம், காணையில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.

விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 29-ஆவது கிளை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் த.மோகன், விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வங்கிக் கிளையைத் திறந்து வைத்து, 122 பயனாளிகளுக்கு ரூ.28,94,450 மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 37,601 குடும்பங்களின் ரூ.169 கோடியிலான நகைக் கடன்கள், மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 68,125 மகளிரின் ரூ.56.51 கோடியிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 96,319 பயனாளிகள் ரூ.767.65 கோடியிலான பயிா்க் கடன்கள் பெற்று பயனடைந்துள்ளனா். விவசாயிகளுக்கு ரூ.136 கோடி பயிா் இழப்பீடுத் தொகை வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஜனகராஜ், காணை ஒன்றியக் குழுத் தலைவா் கலைச்செல்வி,

மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் பாலகிருஷ்ணன், பொது மேலாளா் பிரபாகரன், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கல்பட்டு ராஜா, அன்னியூா் சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com