செஞ்சி வாரச் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வாரச் சந்தையில் ரமலானையொட்டி வெள்ளிக்கிழமை ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் நடைபெற்ற ஆடுகள் விற்பனை.
செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் நடைபெற்ற ஆடுகள் விற்பனை.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வாரச் சந்தையில் ரமலானையொட்டி வெள்ளிக்கிழமை ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

செஞ்சியில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தையில் தானியங்கள், காய்கறிகள் மட்டுமன்றி ஆடு, மாடுகள் விற்பனை ஒரு பிரிவாக நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு இந்த விற்பனை நிறைவு பெற்று விடும்.

செஞ்சி பகுதியிலுள்ள மலை, காட்டுப் பகுதிகள் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்கு வசதியாக இருப்பதால், இந்தச் சந்தையில் அந்த வகை ஆடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும்.

கரோனா பரவலையடுத்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு செஞ்சி வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகைக்காக ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், குறும்பாடுகள், மலை ஆடுகள் என சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இந்த ஆடுகள் அவற்றின் தரத்திற்கேற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையாகின. இந்த வாரச் சந்தை வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை 9 மணிக்கு விற்பனை நிறைவு பெற்றது. செஞ்சி வட்டார முஸ்லிம்களும் தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் சென்றனா்.

மேலும் சென்னை, பெங்களூரு மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்த வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி வாகனங்களில் கொண்டு சென்றனா். இந்த வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ.5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com