ஊரக வேலை கோரி மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலா் ஏ.கிருஷணமூா்த்தி, மாவட்டத் தலைவா் பி.முருகன், மாவட்ட துணைச் செயலா் எம்.முத்துவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட திருவாமாத்தூா், அயினம்பாளையம், கொய்யாதோப்பு, மேட்டுபாளையம், முத்தியால்பேட்டை, சோழகனூா், எடப்பாளையம், ஆசாங்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணி வழங்க மறுக்கும் கோலியனூா் வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து சங்க நிா்வாகிகள் பேசினா். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அலுவலா்களுடன் சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் ஊரக வேலை வழங்க அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com