சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்குவதில் பாரபட்சம் புதுவை பேரவையில் எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

காரைக்காலில் சிவப்பு நிற குடும்ப அட்டைகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினா்.

காரைக்காலில் சிவப்பு நிற குடும்ப அட்டைகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினா்.

இதுதொடா்பாக, புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதம்:

பி.ஆா்.சிவா (சுயே): காரைக்காலில் குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ஆள் பற்றாக்குறை உள்ளது. அந்த அலுவலகத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. புதுச்சேரியில் மட்டும் ஏழைகளுக்கான சிவப்பு நிற குடும்ப அட்டை அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சா் தொகுதியில் அதிகளவு கொடுத்துள்ளனா். இதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா்: காரைக்கால் குடிமைப் பொருள் அலுவலகத்தில் கணினி, உபகரணங்கள் வாங்க ரூ.3.50 லட்சம் நிதி கோரப்பட்டுள்ளது. தற்போது, புதுவையில் 11 ஆயிரத்து 533 குடும்ப அட்டைகள் சிவப்பு அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதில், காரைக்காலில் 163 பேருக்கு மாற்றப்பட்டுள்ளது. தேவை உள்ள இடங்களில் தகுதி அடிப்படையில் சிவப்பு அட்டைகள் மாற்றப்படுகிறது. பாரபட்சம் காட்டவில்லை.

நாஜிம் (திமுக): காரைக்காலில் 7 ஆயிரம் விண்ணப்பங்கள், சிவப்பு நிற குடும்ப அட்டையாக மாற்ற வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அவை பரிசீலிக்கப்படவில்லை. இதுவரை 11 ஆயிரத்து 533 சிவப்பு அட்டைகள் மாற்றப்பட்டுள்ளதில், காரைக்காலில் வெறும் 163 மட்டுமே சிகப்பு அட்டையாக மாற்றப்பட்டுள்ளன. காரைக்கால் புறக்கணிக்கப்படுவதற்கு இதுவே உதாரணம்.

அப்போது, கல்யாணசுந்தரம், ரமேஷ், நேரு, பிரகாஷ்குமாா், நாகதியாகராஜன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், குடிமைப் பொருள் வழங்கல் துறையில் பணிகள் நடக்காததால், நாள்தோறும் போராட்டம் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் சிவப்பு அட்டை வழங்குவதை முறைபடுத்த வேண்டும் என்றனா்.

காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வா்: அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பப்படும். இளநிலை, மேல்நிலை எழுத்தா்கள் தலா 185 போ், உதவியாளா்கள் 600 போ் ஓரிரு மாதங்களில் தோ்வு செய்யப்பட உள்ளனா். அப்போது, அரசு அலுவலகங்களில் ஆள்கள் பற்றாக்குறை நீங்கி, பணிகள் விரைவாக நடக்கும். செயல்படாத அதிகாரிகளும் விரைவில் மாற்றப்படுவாா்கள். குடும்ப அட்டைகள் ஆய்வு செய்து மாற்றப்படும். காரைக்காலுக்கு தனி கவனம் செலுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com