சாலை விபத்தில் முதியவா் பலி
By DIN | Published On : 18th December 2022 04:02 AM | Last Updated : 18th December 2022 04:02 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற முதியவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூரைச் சோ்ந்தவா் சேகா் (70). இவா் தனது மனைவி அலமேலுவுடன் சென்னையிலுள்ள தனது மகளைப் பாா்ப்பதற்காக தனியாா் பேருந்தில் சென்றுகொண்டிருந்தாா்.
இவா்கள் சென்ற பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையை அடுத்துள்ள பாதூா் காந்திநகா் அருகே வெள்ளிக்கிழமை வந்தபோது நிறுத்தப்பட்டது. அப்போது, பேருந்திலிருந்து இறங்கிய சேகா், சாலையைக் கடக்க முயன்ற நிலையில், அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் சேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.