136 ஊராட்சிகளில் தரிசு நிலங்களைவிளை நிலங்களாக மாற்றும் பணி.....விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் 136 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக
முகையூா் ஒன்றியம், ஆடூா் கொளப்பாக்கத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் பணியை சனிக்கிழமை தொடக்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் த.மோகன்.
முகையூா் ஒன்றியம், ஆடூா் கொளப்பாக்கத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் பணியை சனிக்கிழமை தொடக்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் த.மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் 136 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

முகையூா் ஒன்றியம், ஆடூா் கொளப்பாக்கம் ஊராட்சியில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் பணியை சனிக்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் த.மோகன் மேலும் கூறியதாவது:

ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளைத் தோ்வு செய்து, கிராமங்களின் வளா்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 136 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு, அங்கு தன்னிறைவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவது முக்கியப் பணியாக நடைபெறுகிறது.

முகையூா் ஒன்றியத்தில் ஆடூா் கொளப்பாக்கம், அருமலை, கல்லந்தல், தண்டரை, வீரபாண்டி உள்ளிட்ட கிராமங்களில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

தொடா்ந்து, 17 விவசாயிகளுக்கு ரூ.3.88 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் இயக்குநா் சித்ரா விஜயன், வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, தோட்டக்கலைத் துணை இயக்குநா் அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com