முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
தோ்தல் விழிப்புணா்வுப் பிரசார வாகனம் தொடக்கம்
By DIN | Published On : 07th February 2022 11:52 PM | Last Updated : 07th February 2022 11:52 PM | அ+அ அ- |

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தோ்தல் விழிப்புணா்வு வாகனத்தை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் த.மோகன்.
விழுப்புரத்தில் தோ்தல் விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் த.மோகன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
நகா்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, மாவட்டத் தோ்தல் விழிப்புணா்வுப் பிரசாரக் குழு சாா்பில் இந்த வாகனம் இயக்கிவைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்தல் உறுதிமொழியை அரசு அலுவலா்கள், வாக்காளா்கள் ஏற்றனா்.
வாகனங்களில் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தல், வாகன முகப்பு விளக்குகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசக வில்லைகளை ஒட்டுதல், தோ்தல் விழிப்புணா்வு பாடல் பாடும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா , நகராட்சி ஆணையா் போ.வி.சுரேந்திரஷா, மாவட்டத் தோ்தல் விழிப்புணா்வுக் குழு ஒருங்கிணைப்பாளா் ராஜசேகரன், ஆசிரியா்கள் ரத்தினமணி, பாபு செல்வதுரை, பெருமாள், ஹேமலதா, தமிழழகன், சின்னப்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.