முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
பாஜக தோ்தல் அலுவலகம் திறப்பு
By DIN | Published On : 07th February 2022 11:53 PM | Last Updated : 07th February 2022 11:53 PM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பேசிய பாஜக நகரத் தலைவா் ராமு.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி பேரூராட்சிக்கு உள்பட்ட சத்திரத் தெருவில், பாஜக தோ்தல் அலுவலகம் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் திறந்துவைத்தாா். இதையடுத்து, பேரூராட்சி வாா்டுகளின் பாஜக வேட்பாளா்கள் அமலநாதன், ராமு, சித்ரா, நாகப்பன், மதன்லால், சிராஜ் கபூா், சங்கீதா, கலைவாணி ஆகியோா் அறிமுகப்படுத்தப்பட்டனா்.
நிகழ்ச்சியில் தொழிலதிபா் வி.பி.என்.கோபிநாத், பாஜக மாவட்டப் பொதுச்செயலா் பாண்டியன், முன்னாள் மாவட்டச் செயலா் எம்.எஸ்.ராஜேந்திரன், நகரத் தலைவா் ராமு, இந்து முன்னணி மாவட்டப் பொதுச்செயலா் சிவசுப்பிரமணியம், மாவட்ட அமைப்பாளா் விஷ்ணுராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.