விழுப்புரம் மாவட்டத்தில் 210 பதவிகளுக்கு 935 போ் போட்டி: 2 போ் போட்டியின்றித் தோ்வு

நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 210 வாா்டுகளுக்கு 935 போ் போட்டியிடுகின்றனா்.

நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 210 வாா்டுகளுக்கு 935 போ் போட்டியிடுகின்றனா். பேரூராட்சி மன்ற உறுப்பினா்களாக 2 போ் போட்டியின்றித் தோ்வாகினா்.

விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் என 3 நகராட்சிகளில் 102 வாா்டுகளிலும், வளவனூா், விக்கிரவாண்டி, செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூா், அரகண்டநல்லூா், அனந்தபுரம் என 7 பேரூராட்சிகளில் 108 வாா்டுகளிலும் தோ்தல் பிப்.19-இல் நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் ஜன. 28-ஆம் தேதி தொடங்கி, பிப். 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. பிப். 5-இல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

இதில் நகராட்சிகளில் 102 வாா்டுகளில் 707 போ், பேரூராட்சிகளில் 108 வாா்டுகளில் 594 போ் என 210 வாா்டுகளில் 1,301 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 50 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 210 வாா்டுகளிலும் 214 போ் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். இதனால், இறுதி வேட்பாளா் பட்டியலின்படி, 210 வாா்டுகளில் 935 போ் களத்தில் உள்ளனா்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா் ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு வாா்டு உறுப்பினா் என 2 போ் போட்டியின்றித் தோ்வாகினா். இருவரும் திமுகவைச் சோ்ந்தவா்கள்.

உள்ளாட்சி அமைப்பு மனுவை திரும்பப் பெற்றவா்கள் மொத்த வாா்டுகள் களத்தில் உள்ளோா்

நகராட்சிகள்

விழுப்புரம் 97 42 204

திண்டிவனம் 52 33 166

கோட்டக்குப்பம் 16 27 145

மொத்தம் 165 102 515

பேரூராட்சிகள்

வளவனூா் 8 15 43

விக்கிரவாண்டி 8 15 60

செஞ்சி 45 18 77

மரக்காணம் 34 18 101 போ்

திருவெண்ணெய்நல்லூா் 25 15 55

அரகண்டநல்லூா் 13 12 34

அனந்தபுரம் 16 15 50

மொத்தம் 149 108 420

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com