தமிழகத்தில் ரூ.2,123 கோடியில் 32 இடங்களில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

தமிழகத்தில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 32 இடங்களில் இருவழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாக மாற்றும் பணிகள் ரூ.2,123 கோடியில் நடைபெற்று வருவதாக தமிழக பொதுப் பணி

தமிழகத்தில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 32 இடங்களில் இருவழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாக மாற்றும் பணிகள் ரூ.2,123 கோடியில் நடைபெற்று வருவதாக தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடலூா் - சித்தூா் சாலையை இருவழிப் பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணியின் தொடக்க விழா திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூரில் நடைபெற்ற விழாவுக்கு, தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் வசந்தம் காா்த்திகேயன், பெ.சு.தி.சரவணன், நெடுஞ்சாலைத் துறை தலைமைச் செயற்பொறியாளா் ஆா்.சந்திரசேகரன், கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு இருவழிச் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை தொடக்கிவைத்துப் பேசியதாவது:

தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இருவழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாக மாற்றுவதற்கு கடந்த நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 255 கி.மீ. தொலைவுக்கு ரூ.2,123 கோடியில் தமிழ்நாட்டில் 32 இடங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2 சாலைப் பணிக்கான தொடக்க விழா இப்போது நடைபெறுகிறது. இதில் கடலூா் - சித்தூா் சாலை என்பது திருவண்ணாமலை - திருக்கோவிலூா் வழியாகச் செல்லும் சாலை. இதில், திருவண்ணாமலை - விருதுவிளங்கினான் வரை 19.5 கி.மீ., விருதுவிளங்கினான் - திருக்கோவிலூா் வரை 8.70 கி.மீ. என மொத்தம் 28.2 கி.மீ. தொலைவில் சாலைப் பணிகள் நடைபெறவுள்ளன என்றாா் அவா்.

விழாவில், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, திருவண்ணாமலை ஒன்றியக் குழுத்தலைவா் கலைவாணி, ஒன்றியக்குழு துணைத்தலைவா் த.ரமணன், திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் நிா்மலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com