விழுப்புரத்தில் இன்று 2,033 இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 2,033 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறவுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 2,033 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டில் கரோனா பாவல் குறைந்து கடந்த 5 மாத இடைவெளிக்குப் பின்னா் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. 2021 ஜனவரி முதல் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 18 லட்சத்து 11 ஆயிரத்து 530 பேருக்கும், இரண்டாம் தவணையாக 18 லட்சத்து 7 ஆயிரத்து 593 பேருக்கும், ஊக்குவிப்பு தவணையாக 15,759 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் 2033 இடங்களில் நடத்தப்படவுள்ளது. இந்த முகாம்களில் முதல், இரண்டாம் தவணை மற்றும் ஊக்குவிப்பு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com