எஸ்.ஐ. தோ்வுக்கான மையங்கள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.ஐ. தோ்வு நடைபெறவுள்ள தோ்வு மையங்களை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ. தோ்வு மையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையம் மூலம் மாநிலம் முழுவதும் வருகிற 25, 26 ஆகிய தேதிகளில் உதவி காவல் ஆய்வாளா் பணிக்கான தோ்வு நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, வி.ஆா்.எஸ். பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 7,943 பேரும், காவல் துறையைச் சோ்ந்த 276 பேரும் தோ்வு எழுத உள்ளனா்.

இந்த நிலையில், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி உள்ளிட்ட தோ்வு மையங்களை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். சட்டக் கல்லூரி முதல்வா் கயல்விழி, சிறப்பு உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com