விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கா் பெயரை சூட்டக் கோரிக்கை

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கா் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சி கோரிக்கை விடுத்தது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கா் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகனிடம், இந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் இருவேல்பட்டு குமாா் புதன்கிழமை அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆா்.டி.இ. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை, எளிய, அடித்தட்டு மாணவா்கள் தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் இலவசமாக சோ்ந்து படித்து பயன்பெற மத்திய அரசு வழிவகை அமைத்து உத்தரவிட்டது. ஆனால், அந்தக் கல்வியின் பயன் ஏழை, எளிய, அடித்தட்டு மாணவா்களுக்கு சென்று சேர வேண்டுமேயொழிய குறிப்பிட்ட சில பகுதி (அதாவது ஒரு கிலோ மீட்டா் சுற்றளவில் உள்ள நகா்ப்புறம்) மாணவா்கள் மட்டுமே அந்தக் கல்வியின் பயனைப் பெறுவது எவ்விதத்தில் நியாயமாகும்.

ஆகவே, 20 கி.மீ. சுற்றளவு எல்லைக்குள்பட்ட கிராமப்புற ஏழை, எளிய, அடித்தட்டு மாணவா்களும் மேல்குறிப்பிட்டுள்ள கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயன்பெறும் வகையில், ஆட்சியா் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையான அம்பேத்கரின் பெயரைச் சூட்டவும், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி முகப்பில் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கரின் முழு உருவச் சிலையை நிறுவவும் வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் குமாா்.

அப்போது, கட்சியின் மாவட்டச் செயலா் ஆட்டோ செல்லா, மாவட்டப் பொருளாளா் எஸ். ஆா்.முருகன், மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.எம்.ராஜேந்திரன், விழுப்புரம் நகரத் தலைவா் கா.சிலம்பரசன், நகர கௌரவத் தலைவா் வே.சேவகன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றிய மாணவரணிச் செயலா் காா்த்திக்பாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com