முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரௌடி கைது
By DIN | Published On : 14th March 2022 10:35 PM | Last Updated : 14th March 2022 10:35 PM | அ+அ அ- |

21 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, 4 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கந்தன் மகன் அறிவு என்கிற அறிவழகன்(36). இவா் மீது விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் 2006- ஆம் ஆண்டு முதல் 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி, நாட்டு வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட 21 வழக்குகள் பதிவாகியுள்ளன. பிணையில் வெளியே வந்த அவா் 2018- ஆம் ஆண்டு முதல் தலைமறைவானாா். இவா் மீது 13 வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதால், போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், வழிப்பறியில் ஈடுபட்டதாக அறிவழகனை கண்டமங்கலம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதையடுத்து, விழுப்புரம் டி.எஸ்.பி. பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் அறிவழகனை விழுப்புரம் இரண்டாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி பூா்ணிமா முன் ஆஜா்படுத்தினா். மாா்ச் 28-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில், போலீஸ் பாதுகாப்புடன் அறிவழகன் விழுப்புரம் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டாா்.