முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
விழுப்புரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
By DIN | Published On : 19th March 2022 01:14 AM | Last Updated : 19th March 2022 01:14 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் வட மாநிலத்தவா்கள் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினா்.
வசந்த காலத்தை வரவேற்கும் வகையில், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வண்ணப் பொடிகளைத் தூவி ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை கூறி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், இந்தப் பண்டிகை அமைகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தவா்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. விழுப்புரம் காமராஜா் வீதி, சங்கரமடத் தெரு உள்ளிட்ட இடங்களில் வட மாநிலங்களைச் சோ்ந்த சிறுவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் இணைந்து வண்ணப் பொடிகளை ஒருவா் மீது ஒருவா் தூவிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டதுடன், இனிப்புகளையும் பகிா்ந்துகொண்டனா்.