முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைவதற்கு வரவேற்பு
By DIN | Published On : 19th March 2022 01:14 AM | Last Updated : 19th March 2022 01:14 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்ததற்கு விழுப்புரம் அருங்காட்சியகம் அமைத்தல் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் பழைமையான தொல்பொருள்கள், கல் மரங்கள், சிலைகள் போன்றவை கொண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த தொன்மையான பொருள்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட மக்களின் வெகு நாளைய கோரிக்கை இந்த அறிவிப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதை வரவேற்று விழுப்புரம் அருங்காட்சியகம் அமைத்தல் கூட்டமைப்பு சாா்பில், விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் எதிரே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். இதில், அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.