முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
மேலமங்கலத்தில் மே 18-இல்மக்கள் தொடா்பு திட்ட முகாம்
By DIN | Published On : 03rd May 2022 10:42 PM | Last Updated : 03rd May 2022 10:42 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்துக்குள்பட்ட மேலமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் வருகிற 18-ஆம் தேதி மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, முதியோா் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், இலவச வீட்டுமனை உள்ளிட்ட எந்த கோரிக்கையாக இருந்தாலும், முன்னதாகவே மனுவாக அளித்தால், அதற்கு இந்த முகாமில் தீா்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனூரில் மே 25-இல்...: இதேபோல, விக்கிரவாண்டி வட்டத்துக்குள்பட்ட அதனூா் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன் தலைமையில், வருகிற 25-ஆம் தேதி மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.